ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் : கமல் ஹாசன்

 

ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் : கமல் ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் கோவைக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அவர் என் நேசத்திற்குரிய கோவை மக்களைச் சந்திப்பதற்காகவும், மக்கள் நீதி மய்யம் சார்பாக சில நலத்திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகவும் கோயம்புத்தூர் வருகிறேன். இரண்டு நாட்கள் அங்கிருப்பேன். சந்திப்போம் உறவுகளே. என்று குறிப்பிட்டிருந்தார்.அதன் படி நேற்று கோவை விமான நிலையத்தில் கமல் ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யத்தினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் : கமல் ஹாசன்

இந்நிலையில் கமல் ஹாசன் கிராம சபை கூட்டம் நடத்தக் கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆகஸ்டு 15-ஆம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்தேன். தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுக்க உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் : கமல் ஹாசன்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் ஹாசன் போட்டியிட்டார். ஆனால் தேர்தல் முடிவில் கமல் ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியை தழுவினார். தேர்தல் தோல்விக்கு பிறகு கமல் ஹாசன் கோவைக்கு செல்லாத நிலையில் முதல்முறையாக கோவைக்கு சென்று நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்