ஈரோட்டில் கிராம உதவியாளர்கள் ரத்த கையெழுத்திட்டு நூதன போராட்டம்!

 

ஈரோட்டில் கிராம உதவியாளர்கள் ரத்த கையெழுத்திட்டு நூதன போராட்டம்!

ஈரோடு

ஈரோட்டில் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, கிராம உதவியாளர்கள் ரத்தத்தினால் கையெழுத்திட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியமாக 15 ஆயிரத்து 700 அடிப்படை ஊதியமாக வழங்கவும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆக 7 ஆயிரத்து 850 வழங்கவும் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ஈரோட்டில் கிராம உதவியாளர்கள் ரத்த கையெழுத்திட்டு நூதன போராட்டம்!

மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பவும், பதவி உயர்வு பெற்றவர்களின் ஓய்வூதிய குறைபாடுகளை சரி செய்யவும் வலியுறுத்தி அவர்கள் கோரிக்கை மனுவில் ரத்தத்தினால் கையெழுத்திட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பேசிய கிராம உதவியாளர் சங்க நிர்வாகிகள், இந்த நூதன போராட்டம் அனைத்து வட்டார அலுவலகத்திலும் வரும் 19ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தனர்.மேலும், வரும் 24ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.