நிலாவில் உள்ள ஒரு பள்ளத்திற்கு இஸ்ரோ வைத்த பெயர் என்ன தெரியுமா?

 

நிலாவில் உள்ள ஒரு பள்ளத்திற்கு இஸ்ரோ வைத்த பெயர் என்ன தெரியுமா?

இந்தியாவின் பெருமைக்கு உரியா அடையாளம் சந்திரயான் -2. நிலா பற்றிய ஆய்வில் முக்கியமான தகவல்களை அளித்து வருகிறது. அது நிலாவில் இருக்கும் ஒரு பள்ளத்தை போட்டோ எடுத்து அனுப்பியது. அந்தப் பள்ளத்திற்கு இஸ்ரோ ஒரு பெயர் சூட்டியுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வின் தந்தையான டாக்டர் விக்ரம் சாரபாய் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, சந்திரயான் 2 நிலாவின் சுற்றுப்பாதையில் எடுத்த படங்களில் காணப்படும் பள்ளத்தாக்குக்கு சாரபாய் பள்ளம் (“Sarabhai” Crater) எனப் பெயரிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மரியாதை  செலுத்துகிறது.

நிலாவில் உள்ள ஒரு பள்ளத்திற்கு இஸ்ரோ வைத்த பெயர் என்ன தெரியுமா?

சந்திரனில் அமெரிக்காவின் அப்பல்லோ 17 விண்கலமும், சோவியத் யூனியனின் லூனா 21 விண்கலமும் இறங்கிய இடத்திற்கு 250 முதல் 300 கி.மீ. தொலைவில் இந்த எரிமலைப்  பள்ளத்துக்கு டாக்டர் விக்ரம் சாரபாய்  பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டாக்டர் விக்ரம் சாரபாயின் நூற்றாண்டு கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நிறைவடைந்தது. அதையொட்டி, அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது  என்று கூறப்படுகிறது.

நிலாவில் உள்ள ஒரு பள்ளத்திற்கு இஸ்ரோ வைத்த பெயர் என்ன தெரியுமா?
Vikram Sarabhai

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு இடையூறுகளுக்கும் இடையில் டாக்டர் விக்ரம் சாரபாயும் அவரது குழுவினரும் பிள்ளையார் சுழி போட்ட தீரமான இந்தியாவின் விண் வெளிப் பயணத்தின் புகழ் மகுடத்தில் மாணிக்கத்தைப் போல் இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சந்திரயான் முப்பரிமாணப் படமெடுத்த சாரபாய் பள்ளத்தாக்கு 1.7 கி.மீ. ஆழம் கொண்டது.  அதன் உட்புறச் சுவர் பகுதி 25 முதல் 35 டிகிரி வரையில் சாய்ந்திருக்கிறது. இந்த ஆய்வக் குறிப்புகள் எரிமலைகள் நிரம்பிய சந்திரனின் நிலப் பகுதியை ஆராய்வதற்கு உதவும் என்று இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.