என்கவுன்ட்டர் பயத்தில் சரணடைந்த விகாஷ் துபே – கூட்டாளிகள் சுடப்பட்டதால் வந்த மரணபயம்… கைதானது எப்படி?

என்கவுன்ட்டர் பயத்தில் சரணடைந்த விகாஷ் துபே – கூட்டாளிகள் சுடப்பட்டதால் வந்த மரணபயம்… கைதானது எப்படி?

உ.பி .யின் கான்பூரில் எட்டு போலீசாரை கொன்ற கேங்ஸ்டர் விகாஷ் துபே போலிசாரால் இன்று கைது செய்யப்பட்டார் .அவர் கைதான விஷயம் நாடு முழுவதும் மிக பரபரப்புக்குள்ளாகியுள்ளது. அவர் கைதானது எப்படி என்று அதை நேரில் பார்த்த ஒரு பூசாரி கூறினார்.

என்கவுன்ட்டர் பயத்தில் சரணடைந்த விகாஷ் துபே – கூட்டாளிகள் சுடப்பட்டதால் வந்த மரணபயம்… கைதானது எப்படி?
விகாஸு துபே இன்று உ.பி.ஜைன் மகாகல் கோயிலில் 250 ரூபாய் டோக்கன் வாங்கி கோயிலுக்குள் செல்ல முயன்றபோது அங்கிருந்த சில பாதுகாப்புப் படையினர் அவரை சந்தேகப்பட்டு பார்த்தபோது, அவரே முன்வந்து ,”ஆமாம் நான்தான் விகாஷ் துபே, நானேதான் விகாஷ் துபே நான்தான், என்னை கைது செய்யுங்கள் “என்று கத்தியதாக அந்த கோயில் பூசாரி கூறினார் அவர் போலிஸ் என்கவுண்டரில் கொல்லப்படுவார் என்ற அச்சத்தில் சரணடைய விரும்பியதாக கோயிலின் பூசாரி ஆஷிஷ் மேலும் கூறினார்.

என்கவுன்ட்டர் பயத்தில் சரணடைந்த விகாஷ் துபே – கூட்டாளிகள் சுடப்பட்டதால் வந்த மரணபயம்… கைதானது எப்படி?
கோயிலில் பாதுகாப்புப் படையினர் அவரைக் கைது செய்தபோது துபே எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை என்று பூசாரி கூறினார். மேலும், அவர் தப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல சம்பவம் நடந்த நேரத்தில் பாதுகாப்புப் படையினர் எந்த ஆயுதங்களையும் எடுத்துச் செல்லவில்லை.
துபே தாமே முன்வந்து சரணடைய காரணம் அவரின் கூட்டாளிகள் பலரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுவிட்டதால் பயந்து போன அவர் தம்மையும் அது போல சுட்டுவிடக்கூடாது என்று சரணடைந்துவிட்டார் .முன்னதாக உ.பி .அரசு அவரை பற்றிய தகவல் கொடுத்தால் 5 லட்சம் கொடுப்பதாக அறிவித்திருந்தது .மேலும் அவரின் தாயாரே அவரை என்கவுன்டரில் சுட சொன்னதும் குறிப்பிடத்தக்கது .