உ.பி போலீசையே ஒரு வழி செய்த விகாஸ் தூபே… 30 ஆண்டுகளில் 62 வழக்குகள்

 

உ.பி போலீசையே ஒரு வழி செய்த விகாஸ் தூபே… 30 ஆண்டுகளில் 62 வழக்குகள்

நாட்டையே உலுக்கிய கான்பூர் 8 போலீசார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான விகாஸ் தூபே இன்று என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளான். இதன் மூலம் அவனுக்கு பின்னணியாக இருந்து செயல்பட்ட போலீஸ், அரசியல்வாதி யார் என்பது தெரியாமலே போய்விட்டது.
காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டதாகவும் அதை பயன்படுத்திக் கொண்டு போலீசார் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விகாஸ் சுட்டதாகவும் கதை சொல்லப்படுகிறது. இது நம்பும்படியாக இல்லை என்றாலும் எட்டு போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்ற கொலைகாரனுக்குக் கிடைத்த தண்டனை என்று எடுத்துக்கொள்வதா, யாரையோ காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை.

உ.பி போலீசையே ஒரு வழி செய்த விகாஸ் தூபே… 30 ஆண்டுகளில் 62 வழக்குகள்இந்த நிலையில் விகாஸ் தூபே பற்றிய பின்னணி தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளது.
1990ல் முதன் முதலாக அதிதடி வழக்கு தொடர்பாக விகாஸ் தூபே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஒரு பெரிய ரவுடியாக நிலைநிறுத்திக்கொள்ள பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளான் விகாஸ்.
2001ம் ஆண்டு உத்தரப்பிரதேச பா.ஜ.க அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை துரத்திச் சென்று போலீஸ் நிலையத்துக்குள் வைத்தே கொலை செய்தவன் விகாஸ் துபே என்று கூறப்படுகிறது. அப்போது அவனை பிடிக்க போலீசாருக்கு ஆறு மாதங்கள் தேவைப்பட்டன. அந்த வழக்கில் அமைச்சரின் பாதுகாவலர்கள் அளித்த சாட்சி விகாஸ் தூபேவுக்கு சாதகமாக அமைந்ததால் அவன் சிறையிலிருந்து நான்கே ஆண்டுகளில் வெளியே வந்தான்.

உ.பி போலீசையே ஒரு வழி செய்த விகாஸ் தூபே… 30 ஆண்டுகளில் 62 வழக்குகள்

அமைச்சரை போலீஸ் நிலையத்திலேயே போட்டுத் தள்ளி, விடுதலையானதால் விகாஸ் மீது மற்றவர்களுக்கு பயம் வந்தது. அவனுடன் அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் பழகி வந்துள்ளனர்.
கான்பூரில் தன் சொந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்து சொத்துக்களை அபகரித்தது, கல்லூரி ஆசிரியர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியரை கொலை செய்தது, கேபிள் ஆபரேட்டர் தினேஷ் தூபேவை கொலை செய்தது என்று கொஞ்சநஞ்ச காரியங்களை விகாஸ் தூபே செய்யவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் அவன் மீது 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஐந்து கொலை வழக்கு, 8 கொலை முயற்சி வழக்கு ஆகும்.

உ.பி போலீசையே ஒரு வழி செய்த விகாஸ் தூபே… 30 ஆண்டுகளில் 62 வழக்குகள்

போதை மருந்தை கடத்துவதாகவும் வழக்கு உள்ளது.
அடிதடியில் ஆரம்பித்து எட்டு போலீசாரை கொலை செய்தது வரை விகாஸ் தூபேயின் வாழ்க்கை முழுக்க ரத்தமாகவே உள்ளது. தற்போது என்கவுண்டர் மூலம் விகாஸின் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரரை கொன்றபோதே செய்ய வேண்டியது. அப்போது அதை செய்யத் தவறியதால் போன உயிர்கள் ஏராளம். இப்போதும் செய்யாதிருந்தால் இன்னும் அதிக உயிர்ப்பலியை வாங்கியிருப்பான் விகாஸ் என்கின்றனர் உ.பி போலீசார்.