திட்டமிட்டபடி நடந்து முடிந்த விகாஸ் தூபே என்கவுண்டர் – தப்பிய தலைவர்கள்!

 

திட்டமிட்டபடி நடந்து முடிந்த விகாஸ் தூபே என்கவுண்டர் – தப்பிய தலைவர்கள்!

உத்தரப்பிரதேசத்தில் எட்டு போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான விகாஸ் தூபே இன்று என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இதனால் அவனுக்கு பின்னணியாக இருந்த அரசியல் தலைவர்கள், போலீசார் பற்றிய விவரம் மூடி மறைக்கப்பட்டுவிட்டது.

திட்டமிட்டபடி நடந்து முடிந்த விகாஸ் தூபே என்கவுண்டர் – தப்பிய தலைவர்கள்!கான்பூரில் மிகப்பெரிய ரவுடியான விகாஸ் தூபேவை போலீசார் கைது செய்ய சென்றனர். இது அறிந்து போலீசார் மீது விகாஸ் கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் எட்டு போலீசார் பலியாகினர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைமறைவான விகாஸ் தூபேவை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். அவனது கூட்டாளிகளை என்கவுண்டர் செய்ததை தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த விகாஸ் சரண் அடைந்தான் என்று கூறப்பட்டது. அவனை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் அவன் வாக்குமூலம் அளித்தால் மிகப்பெரிய அரசியல் பின்புலம் உள்ளவர்கள், போலீஸ் அதிகாரிகள் பலரும் மாட்டுவார்கள். அதனால் அவனை என்கவுண்டர் செய்யவே போலீசார் விரும்புவார்கள் என்று கூறப்பட்டது. மேலும் அவன் கைது செய்யப்பட்டாலும் என்கவுண்டர் செய்யப்படவே வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது.

திட்டமிட்டபடி நடந்து முடிந்த விகாஸ் தூபே என்கவுண்டர் – தப்பிய தலைவர்கள்!

இதை உத்தரப்பிரதேச போலீசார் இன்று உறுதி செய்துள்ளனர். விகாஸ் தூபேவை அழைத்து வரும்போது வாகனம் விபத்தில் சிக்கியதாகவும், போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் தூபே சுட முயன்றதாகவும், அதனால் தற்காப்புக்காக அவனை சுட்டுக் கொலை செய்ததாகவும் உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். கான்பூர் போலீசார் விகாஸ் தூபேவை கைது செய்ய வருவதற்கு முன்பு போலீஸ் அதிகாரி ஒருவர் விகாசுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி நடந்து முடிந்த விகாஸ் தூபே என்கவுண்டர் – தப்பிய தலைவர்கள்!அதன் பிறகே போலீசார் மீதான தாக்குதல் சம்பவம் அரங்கேறியது. அவன் உ.பி-யில் இருந்து தப்பிச் செல்ல பலரும் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த என்கவுண்டர் மூலம் அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டது என்று உ.பி-யில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.