‘கட்சி ஆரம்பிப்பதை நிறுத்தினார் விஜய்யின் தந்தை’: காரணம் இது தான்!

‘கட்சி ஆரம்பிப்பதை நிறுத்தினார் விஜய்யின் தந்தை’: காரணம் இது தான்!

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் முடிவை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார் எஸ்.ஏ.சி.

‘கட்சி ஆரம்பிப்பதை நிறுத்தினார் விஜய்யின் தந்தை’: காரணம் இது தான்!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனது கட்சியை பதிவு செய்தார். இதற்கு விஜய் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, கட்சியில் தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என விஜய் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். மேலும், அந்த கட்சியில் ரசிகர்கள் யாரும் இணைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

‘கட்சி ஆரம்பிப்பதை நிறுத்தினார் விஜய்யின் தந்தை’: காரணம் இது தான்!

இதை தொடர்ந்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து பத்மநாபனும், பொருளாளர் பதவியில் இருந்து விஜயின் தாய் ஷோபா ராஜினாமா செய்தனர். இவ்வாறு அடுத்தடுத்து, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு சிக்கல்கள் ஏற்பட்டன.

‘கட்சி ஆரம்பிப்பதை நிறுத்தினார் விஜய்யின் தந்தை’: காரணம் இது தான்!

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார். விஜய் எதிர்ப்பு தெரிவித்ததாலும், ஷோபா ராஜினாமா செய்ததாலும் எஸ்.ஏ.சி இந்த முடிவை எடுத்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய நவம்பர் 5ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.