விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்!

 

விஜய்யின்  ‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து அவர் நடிக்கும் 65வது படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.அத்துடன் இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்தது.

விஜய்யின்  ‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்!

இதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 22ஆம் தேதி டீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன. இந்த போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலான நிலையை தலைப்பு குறித்த சர்ச்சையும் கிளம்பத் தொடங்கியது.

விஜய்யின்  ‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்!

இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் படப்பிடிப்புக்கான அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.ஏற்கனவே விஜய்யின் ஆங்கிலச்சொல் தலைப்புகளாக லவ் டுடே, ஒன்ஸ்மோர், ஃபிரண்ட்ஸ் ,யூத் ,மாஸ்டர் என படங்கள் வெளியான நிலையில் 6-வது படமாக பீஸ்ட் வெளியாக உள்ளது. இதனால் விஜய் தாய்மொழிக்கு எதிராக செயலாப்ட் வருவதாக விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கருத்து கூறி வருகின்றன.