வாக்களிக்க வராத விஜயகாந்த் : காரணம் இதுதானாம்!!

 

வாக்களிக்க வராத விஜயகாந்த் : காரணம் இதுதானாம்!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாக்களிக்காததால் தேமுதிக தொண்டர்கள் கவலையில் உள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் நேற்று சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. காலை முதல் 7 மணிமுதல் இரவு 7 மணிவரை தேர்தல் நடந்து முடிந்தது. நேற்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்த நிலையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் வாக்களித்தனர். அதன்படி மொத்தம் 71.79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.

வாக்களிக்க வராத விஜயகாந்த் : காரணம் இதுதானாம்!!

இந்நிலையில் விருகம்பாக்கத்தில் நேற்று காலை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார். அப்போது பேசிய அவர், கணவர் விஜயகாந்தும், தன் மகன்களும் பின்னர் வந்து வாக்களிப்பார்கள் என்றார். ஆனால் விஜயகாந்த் இல்லாமல் அவரது மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் வந்து வாக்களித்துச் சென்றனர். விஜயகாந்த் எப்போது வருவார் என்ற கேள்விக்கு அவர் மாலையில் வந்து வாக்களிப்பார் என்று அவரது மகன்கள் கூறிவிட்டு சென்றனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால், வாக்குப்பதிவு முடியும் வரை விஜயகாந்த் வரவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்து வரும் நிலையில் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.