“தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு” – விஜயகாந்த் கண்டனம்!

 

“தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு” – விஜயகாந்த் கண்டனம்!

ராமேஸ்வர மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் கொடுக்கும் இன்னல்கள் எல்லை மீறிக் கொண்டிருக்கிறது. மீனவர்களை கத்தி முனையில் விரட்டி அடிப்பதும், படகுகளை சேதப்படுத்தி தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. அண்மையில் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களின் 121 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

“தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு” – விஜயகாந்த் கண்டனம்!

அதுமட்டுமில்லாமல், அந்த படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் இலங்கை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தமிழக மீனவர்களின் படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு” – விஜயகாந்த் கண்டனம்!

அதில், “தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 121 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் உத்தரவிட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக மீனவர்களை அழிக்க வழங்கிய தீர்ப்பு இந்த சரியானது அல்ல. மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்று. இருநாட்டு மீனவர்கள் இடையே தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த இது வழிவகை செய்யும். மேலும், படகுகளை நம்பி வாழக்கூடிய மீனவர்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். இது இரு நாட்டுடைய நட்பை கேள்விக்குறியாக்கும்.

எனவே இதில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நல்ல தீர்ப்பு வழங்கி ,தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.