உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி – விஜயகாந்த் அறிவிப்பு!

 

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி – விஜயகாந்த் அறிவிப்பு!

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி – விஜயகாந்த் அறிவிப்பு!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணியிலிருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி – விஜயகாந்த் அறிவிப்பு!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு உரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிக நிர்வாகிகளாக இருப்பவர்களும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்கள் தகுதியானவர்கள். மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக விருப்ப மனு பெற கட்டணத் தொகை ரூ. 4 ஆயிரம், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக விருப்ப மனு பெற கட்டணத் தொகை ரூ. 2 ஆயிரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல் களமே 9 மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்துக் கொண்டிருக்கின்றன. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில், தேமுதிகவும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அமமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.