விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 5 தளங்கள் கொண்ட அந்த சொகுசு ஓட்டலில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் கொரோனா வார்டில் இருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உள்ளே சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலத்தில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.