“முதலமைச்சர் ஸ்டாலினின் தெளிவான முடிவை வரவேற்கிறேன்” – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

 

“முதலமைச்சர் ஸ்டாலினின் தெளிவான முடிவை வரவேற்கிறேன்” – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

கொரோனா தொற்று பாதிப்பு அடங்காத நிலையில், மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தப்படாது என தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டது. மருத்துவக் குழுவினர், கல்வியாளர்கள், அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் என பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டதற்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.

“முதலமைச்சர் ஸ்டாலினின் தெளிவான முடிவை வரவேற்கிறேன்” – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!


மூன்றாவது அலையும் வர வாய்ப்புள்ளதாலும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே, தடுப்பூசி செலுத்த இயலும் என்பதாலும் மாணவர்களை ஒரே நேரத்தில் தேர்வு எழுத வரச்செய்வது, தொற்றை அதிகரிக்கச் செய்யலாம் என்ற வல்லுநர்கள் அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மதிப்பெண் வழங்குவது குறித்து பரிந்துரைகளை வழங்கிட குழு அமைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்விக்கான சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அரசின் இம்முடிவை பல்வேறு தரப்பினரும் வரவேற்று வருகின்றனர். தற்போது ட்வீட் செய்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், “கொரோனா காலகட்டத்தில், மாணவர்களை மேலும் குழப்பாமல் தமிழக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும்,
+2 தேர்வை ரத்து செய்து, தெளிவான முடிவு எடுத்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.