வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: நிபுணர்கள் குழு அமைக்குமாறு விஜயகாந்த் கோரிக்கை!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்தே இன்னும் இந்தியா மீண்டு வரவில்லை. அதற்குள் மற்றொரு பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகமாக இருப்பதாகவும், அவரை பயிர்களை எல்லாம் சேதப்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. தற்போது ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிக அளவில் இருக்கிறது. ஆனால் இந்த வெட்டுக்கிளிகள் தக்காண பீடபூமியை தாண்டி தமிழத்துக்கு வராது என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பது தொடர்பாக தே.மு.தி.மு.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மிக ஆபத்தான பாலைவன வெட்டுக்கிளிகள் கென்யா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் வழக்கமாக இந்தியாவுக்கு படையெடுக்கும் இவை 27 ஆண்டுகளுக்கு பிறகு பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதால் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வடமேற்கு மாநில விளைநிலங்களை பெருமளவு சேதப்படுத்தி பத்தில் ஒரு மடங்கு மக்களை பட்டினிக்கு தள்ளும் இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்கு வராது என்று தமிழக வேளாண்துறை தெரிவித்திருந்தாலும் அதன் இடப்பெயர்ச்சியை கணிக்க முடியாது என்றும் தமிழகம் விவசாய பூமி என்பதால் தமிழக எல்லையில் வெட்டுகிளிகளை தடுத்து நிறுத்துவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துறைசார்ந்த நிபுணர்கள் ஒரு குழுவை அமைத்து வெட்டுக்கிளியின் இடப்பெயர்ச்சியை கண்காணிக்க வேண்டும் என்றும் ஆபத்து ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Most Popular

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு!

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி லாஜிஸ்டிக் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட முன்னனி 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான (FedEX) பெடக்ஸ், யு.பி.எஸ்...

சீனாவுக்கு படையெடுத்த வெட்டுக்கிளி!

பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டிய வெட்டுக்கிளிகள் சீனாவில் நுழைந்துள்ளன. கொரானாவால் நாட்டின் நிதி நிலைமை கெட்டது என்றால்,சமீபத்தில் படையடுத்து வரும் வெட்டுக்கிளிகளால் எதிர்காலத்தில் உணவுப்பஞ்சம் ஏற்படுமோ என்று அச்சம் உருவாகியுள்ளது. இந்தியாவில் வடமாநிலங்களுக்குள்...

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02% ஆக உயர்வு- மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 8,78, 254 லிருந்து 9,04,225 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,69, 753 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,711 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார...

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய...
Open

ttn

Close