மருத்துவமனையில் விவேக்… வருத்தத்தில் விஜயகாந்த்!

 

மருத்துவமனையில் விவேக்… வருத்தத்தில் விஜயகாந்த்!

நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை ஷூட்டிங் ஒன்றில் பங்கேற்றுள்ளார். ஷூட்டிங் முடிந்த பிறகு சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய அவர், தனது உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக, அவரது உறவினர்கள் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் விவேக்… வருத்தத்தில் விஜயகாந்த்!

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது இதயத்துடிப்பு குறைவாக இருந்ததாக தெரிகிறது. விவேக்கின் உடல்நலம் குறித்து பேசிய அவரது பிஆர்ஓ நிகில் முருகன், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இன்று மாலைக்குள் அவரது உடல்நிலை குறித்த அறிக்கை வெளியிடப்படும் என மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் விவேக்… வருத்தத்தில் விஜயகாந்த்!

மக்கள் எல்லாரையும் சிரிக்க வைத்து மகிழ்வித்த நகைச்சுவை நடிகர் விவேக் பூரண நலம் பெற்று திரும்பி வரவேண்டுமென திரையுலகினரும் அவரது ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் விவேக் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்திக் கேட்டு மிகவும் வருத்தமடைந்ததாக நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.