விஜயகாந்தை நேரில் சென்று பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர்! அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்

 

விஜயகாந்தை நேரில் சென்று பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர்! அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பாதித்ததால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த திங்கட்கிழமை சென்னையில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலம் பெற வேண்டி பல்வேறு கோவில்களில் தேமுதிகவினரால் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும் விஜயகாந்த் விரைவாக நலம்பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

விஜயகாந்தை நேரில் சென்று பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர்! அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரமும், தே.மு.தி.க தலைமையும் அறிவித்த நிலையில் மணப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நேரில் சென்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்தார்.