தே.மு.திக தனித்துப் போட்டியிடுவது பற்றி ஜனவரியில் முடிவு! – பிரேமலதா அறிவிப்பு

தே.மு.திக தனித்துப் போட்டியிடுவது பற்றி ஜனவரியில் முடிவு! – பிரேமலதா அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடுவது பற்றி வருகிற ஜனவரி மாதம் முடிவு செய்யப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தே.மு.திக தனித்துப் போட்டியிடுவது பற்றி ஜனவரியில் முடிவு! – பிரேமலதா அறிவிப்பு

தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நிருபர்களிடம் பேசும்போது தே.மு.தி.க தனித்துப் போட்டியிடுமா என்று கேட்டனர். அதற்கு அவர், “தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்.

தே.மு.திக தனித்துப் போட்டியிடுவது பற்றி ஜனவரியில் முடிவு! – பிரேமலதா அறிவிப்பு

இது குறித்து வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ள கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நிச்சயம் பங்கேற்பார்” என்றார்.

தே.மு.தி.க தற்போது வரை அ.தி.மு.க கூட்டணியில்தான் நீடிக்கிறது. மாநிலங்களவைத் தேர்தலின் போது ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்று அ.தி.மு.க-விடம் போராடியது. ஆனால், தே.மு.தி.க-வை அ.தி.மு.க ஒரு பொருட்டாகக் கருதவில்லை. த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனுக்கு சீட் ஒதுக்கப்பட்டது.
தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்றால் இப்போதே கூட்டணியை விட்டு வெளியேற வேண்டியதுதானே, எதற்காக பொதுக்குழு வரை காத்திருக்க வேண்டும்… சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்கள் பெற தற்போது இருந்தே பிரேமலதா விஜயகாந்த் பேரத்தைத் தொடங்கிவிட்டார் என்று சமூக ஊடகங்களில் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.