மக்கள் தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன்‍ – விஜயகாந்த் ட்வீட்!

 

மக்கள் தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன்‍ – விஜயகாந்த் ட்வீட்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்டது. தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப் பட்ட நிலையில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. விஜயகாந்த், விஜயகாந்த் மகன் பிரபாகரன் உள்ளிட்ட எவரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. பிரேமலதா விஜயகாந்த் மட்டுமே விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். அவரும் தோல்வியை தழுவினார்.

மக்கள் தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன்‍ – விஜயகாந்த் ட்வீட்!

தேர்தலுக்கு முன்னரே, தேமுதிகவுக்கு பல சிக்கல்கள் நேர்ந்தது. கேட்ட இடங்களை அதிமுக கொடுக்காததால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக, தனித்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டது. அதற்கு தொண்டர்கள் ஒப்புக் கொள்ளாததால் கடைசி நேரத்தில் அமமுக கூட்டணியில் சேர்ந்தது. 2011ல் எதிர்க்கட்சியாக அமர்ந்த தேமுதிக, போட்டியிட்ட 60 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது அக்கட்சியின் தொண்டர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

மக்கள் தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன்‍ – விஜயகாந்த் ட்வீட்!

இந்த நிலையில், மக்களின் முடிவை மனமார ஏற்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன்‍. தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் & வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.