விருப்ப மனு தாக்கல் செய்த விஜயகாந்த் மகன்: எந்த தொகுதியில் போட்டி?

 

விருப்ப மனு தாக்கல் செய்த விஜயகாந்த் மகன்: எந்த தொகுதியில் போட்டி?

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் மும்முரமாக களப்பணியாற்றி வரும் நிலையில், தேமுதிக விருப்ப மனு விநியோகத்தை கடந்த மாதம் 25ம் தேதி தொடக்கியது. முதல் நாளே விஜயகாந்த், அவரது மனைவி மற்றும் மகன் தேர்தலில் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். விருதாச்சலத்தில் விஜயகாந்த் போட்டியிட அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். பிரேமலதா விருகம்பாக்கத்தில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது.

விருப்ப மனு தாக்கல் செய்த விஜயகாந்த் மகன்: எந்த தொகுதியில் போட்டி?

இதையடுத்து இன்று காலை விஜயகாந்த் மனைவி பிரேமலதா, எந்த தொகுதியில் போட்டி என்பதை குறிப்பிடாமல் விருப்ப மனு தாக்கல் செய்தார். அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டிருக்கும் சூழலில், தொகுதி குறிப்பிடாமல் விருப்ப மனு அளித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. அதிமுகவுடன் உடன்பாடு எட்டவில்லை என்றால் மக்கள் நீதி மய்யத்துடன் தேமுதிக கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

விருப்ப மனு தாக்கல் செய்த விஜயகாந்த் மகன்: எந்த தொகுதியில் போட்டி?

இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் விருப்பம் மனுவை அளித்தார். எந்த தொகுதியில் போட்டி என்பதை குறிப்பிடாமலேயே அவரும் விருப்ப மனுவை அளித்திருக்கிறார். அதிமுக உடனான தொகுதி பங்கீடு இறுதியானதும் பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் தாங்கள் போட்டியிடப் போகும் தொகுதிகளை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.