தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்!

 

தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்!

தமிழக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பல்வேறு முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், வியாபாரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பணிக்கு வர அறிவுறுத்தப்படுவதால் மக்கள் தடுப்பூசி சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல், தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்த மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விழைகிறார்கள்.

மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான ஆர்வம் பெருகியிருக்கும் நிலையில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவது மக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. பல இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு நிலவும் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசியல் தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், விஜயகாந்தும் அதனை வலியுறுத்தியுள்ளார்.