‘குகையில் இருந்து சிங்கம் வந்துவிட்டது.. இனி வேட்டை தான்’ : கர்ஜிக்கும் விஜய பிரபாகரன்

‘குகையில் இருந்து சிங்கம் வந்துவிட்டது.. இனி வேட்டை தான்’ : கர்ஜிக்கும் விஜய பிரபாகரன்

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு திமுகவும், அதிமுகவும் கூட்டணி கட்சிகளுடன் கறார் காட்டிக் கொண்டிருப்பதால் சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அதிமுகவில் இருந்து கருணாஸ் வெளியேறியதைத் தொடர்ந்து, விஜயகாந்த் கட்சியும் வெளியேறி இருக்கிறது. தேமுதிகவுடனான தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வந்த நிலையில், கட்சியில் இருந்து வெளியேறுவதாக விஜயகாந்த் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இது அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.

‘குகையில் இருந்து சிங்கம் வந்துவிட்டது.. இனி வேட்டை தான்’ : கர்ஜிக்கும் விஜய பிரபாகரன்

பண்ருட்டியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், அதிமுகவிற்கு தான் இனி இறங் குமுகம். அதிமுகவின் தலைமைதான் சரி இல்லை. நாங்கள் கேட்கிற சீட் கொடுக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் பறிக்கப்படும். தலையே போனாலும் தன்மானத்தை இழக்க மாட்டோம். யாருக்கும் தேமுதிகவினர் சளைத்தவர்கள் அல்ல என ஆவேசமாக பேசினார்.

‘குகையில் இருந்து சிங்கம் வந்துவிட்டது.. இனி வேட்டை தான்’ : கர்ஜிக்கும் விஜய பிரபாகரன்

தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி தோல்வி அடைவார். சாதியை பற்றி எனக்கு தெரியாது. சாதியைப்பற்றி பேசுவதில் நான் முட்டாளாகவே இருப்பேன். ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக சீட்டை தேமுதிகவினர் பறிப்பார்கள் என்றார். மேலும் சாணக்கியன் ஆக இருந்தது போதும், இனி தேமுதிக சத்திரியன் ஆக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்தார். விஜய பிரபாகரனின் இந்த பேச்சு அதிமுகவினரை கொதித்தெழச் செய்துள்ளது.