விஜய பிரபாகரனின் அட்ராசிடீஸ்.. புலம்பித் தவிக்கும் தேமுதிக தொண்டர்கள்!

 

விஜய பிரபாகரனின் அட்ராசிடீஸ்.. புலம்பித் தவிக்கும் தேமுதிக தொண்டர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பிரச்னையால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. பிரேமலதா, விஜய பிரபாகரன், சுதீஷ் ஆகியோரது பேச்சுக்களை பொறுக்க முடியாமல் தான் அதிமுக அவர்களிடம் கெடுபிடி காட்டியதாக தகவல்கள் கசிந்தது. அதிமுகவில் இருந்து விலகிய பிறகு எப்படி தேர்தலை சந்திப்போம் என தேமுதிக விழி பிதுங்கியிருந்த சூழலில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அடைக்கலம் கொடுத்தார்.

விஜய பிரபாகரனின் அட்ராசிடீஸ்.. புலம்பித் தவிக்கும் தேமுதிக தொண்டர்கள்!

60 தொகுதிகளையும் கொடுத்து, பிரச்சாரத்துக்கு வாகனத்தையும் கொடுத்து தேமுதிகவை தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறார். பிரேமலதா விருத்தாசலத்தில் போட்டியிடுவதால், அவர் அந்த தொகுதியில் மட்டுமே முழு கவனம் செலுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சுதீஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரும் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. இதனால், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் மட்டும் ஒன் மேன் ஆர்மி போல தேமுதிகவுக்காக களமிறங்கியுள்ளார். அரசியல் பற்றிய புரிதல் ஏதும் இல்லாமல் விஜய பிரபாகரன் வாய்க்கு வந்ததை பிரச்சாரத்தில் பேசிக் கொண்டிருப்பது அக்கட்சியினரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

விஜய பிரபாகரனின் அட்ராசிடீஸ்.. புலம்பித் தவிக்கும் தேமுதிக தொண்டர்கள்!

இப்போதைக்கு தேமுதிக விஜய பிரபாகரனை தான் நம்பியுள்ளது. அதனால், கட்சியின் மொத்த பொறுப்பையும் டேக் ஓவர் செய்த விஜய பிரபாகரன் தனது இஷ்டத்துக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறாராம். இதுமட்டுமில்லாமல், அவர் தனது கோஷ்டியினருடன் சேர்ந்து கொண்டு பிரச்சாரம் செய்கிறேன் என்ற பேரில் கட்சியின் கஜானாவையே காலி செய்துக் கொண்டிருக்கிறாராம். இது தேமுதிகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜய பிரபாகரனுக்கு பிரேமலதாவே பரவாயில்லை என்பது போல இருக்கிறதாம் தேமுதிகவினரின் மனநிலை…!