‘சைலண்டாக தியேட்டருக்கு படம் பார்க்க வந்த விஜய்’ : வைரல் வீடியோ!

 

‘சைலண்டாக தியேட்டருக்கு படம் பார்க்க வந்த விஜய்’ : வைரல் வீடியோ!

மாஸ்டர் படத்தை நடிகர் விஜய் தியேட்டருக்கு சென்று பார்த்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், நடிகர் சாந்தனு என பலர் நடித்துள்ள இப்படம் கடந்த 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியானது.

‘சைலண்டாக தியேட்டருக்கு படம் பார்க்க வந்த விஜய்’ : வைரல் வீடியோ!

இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக பட வெளியீடு தள்ளிப்போனது. கொரோனா காரணமாக படம் வெளியாகுமா என்ற சூழலில் 50% இருக்கைகளுடன் மாஸ்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக அமைந்துள்ள மாஸ்டர் படம் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி நடிகர் விஜய், மாஸ்டர் படத்தை காண தேவி தியேட்டருக்கு வருகை தந்துள்ளனர். அப்போது தியேட்டர் உரிமையாளர்கள் நடிகர் விஜய்யை வரவேற்று அழைத்து சென்றுள்ளனர். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.