Home தமிழகம் கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிப்பு: தேர்தலில் போட்டியிடுகிறாரா விஜய் வசந்த்?

கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிப்பு: தேர்தலில் போட்டியிடுகிறாரா விஜய் வசந்த்?

கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்த் குமார் காலமானதால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்த குமார், கடந்த 28 ஆம் தேதி சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவர் மீண்டு வந்து விடுவார் என காங்கிரசார் எதிர்பார்த்த நிலையில், அவர் உயிரிழந்தது காங்கிரஸில் பெரிய இழப்பாக கருதப்படுகிறது. இதனையடுத்து கடந்த 29 ஆம் தேதி எம்பி வசந்தகுமாரின் உடல், சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

வசந்தகுமாரின் மறைவுக்கு பிறகு அவரது மகன் விஜய் வசந்த் தேர்தலில் போட்டியிடுவார் என பரபரப்பாக பேசப்பட்டது. அதே போல கன்னியாகுமரி காங்கிரஸ் கட்சியினரும் விஜய் வசந்த்தை தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் காலமானதால், கன்னியாகுமரி தொகுதியை காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதனால், 6 மாத காலத்துக்குள் அங்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

இதனையடுத்து பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த வசந்தகுமார் மகன் விஜய் வசந்த், அரசியலில் தனுக்கு விருப்பம் இருப்பதாகவும் தற்போதைக்கு தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், அப்பா நண்பர்கள் பலரும் தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவிப்பதாகவும் காங்கிரஸ் தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பைனான்சியர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

மதுரை திண்டுக்கல் மாவட்டத்தில் பைனான்சியர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் ராதாராஜ் நகரை சேர்ந்தவர்...

நிவர் புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு...

சிறுமியை கடத்தி திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது

தர்மபுரி தருமபுரியில் 12ஆம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்த பட்டதாரி ஆசிரியரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை...

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி எம்எல்ஏ மனு

திருப்பத்தூர் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம், திமுக எம்எல்ஏ நல்லதம்பி மனு வழங்கினார். அந்த...
Do NOT follow this link or you will be banned from the site!