விஜய் வசந்த் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

 

விஜய் வசந்த் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் மூலம் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். அதிமுக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் ,செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி ,கே.பி. அன்பழகன்,ஓ.எஸ். மணியன், கே.ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் ,ஆர்.பி. உதயகுமார்,கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

விஜய் வசந்த் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

இந்த சூழலில் கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார், கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அந்த தொகுதிக்கு கடந்த 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் போட்டியிட்டார். பாஜக சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் களமிறங்கினார்.இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இதுவரை 1,66,706 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 1,07,893 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் விஜய் வசந்த் 58,813 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.