அப்பா தொகுதியில் களம்காண துடிக்கும் விஜய் வசந்த்

 

அப்பா தொகுதியில் களம்காண துடிக்கும் விஜய் வசந்த்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக, திமுக கட்சிகள் தொகுதி உடன்பாடு பற்றி பேசி வருகிறது. இதில் திமுகவில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் தொகுதி பங்கீடு குறித்த முடிவு அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் விசிக 6, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6, மனித நேய மக்கள் கட்சி 2, முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அப்பா தொகுதியில் களம்காண துடிக்கும் விஜய் வசந்த்

இந்நிலையில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட தனது ஆதரவாளர்களுடன் வந்த அவர் விருப்பமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், என் கனவை நிறைவேற்றுவேன். வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது ராகுல்காந்தி கன்னியாகுமரிக்கு வந்து சென்றது பெரியளவில் எழுச்சியை உருவாக்கியுள்ளது. என் தந்தை கன்னியாகுமரிக்கு செய்ய நினைத்த அனைத்தையும் நான் செய்து தருவேன். கன்னியாகுமரி காங்கிரஸ் கோட்டை என்றார்.

அப்பா தொகுதியில் களம்காண துடிக்கும் விஜய் வசந்த்

முன்னதாக தமிழக காங்கிரஸ் கட்சிக்கு துணை தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். இதில் மூத்த தலைவர் தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரின் மகன்களுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டது.இதில் மறைந்த எம்.பி. வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.