மாஸ்டர் படத்திற்கு புதிய எமோஜி வெளியிட்ட ட்விட்டர்!

 

மாஸ்டர் படத்திற்கு புதிய எமோஜி வெளியிட்ட ட்விட்டர்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் போஸ்டர் புரொடக்ஷன் முடிந்து தயாரான நிலையில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணாமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது

Image

இதை தொடர்ந்து இப்படம் ஓடிடியில் வெளியாகும் என இணையத்தில் செய்திகள் உலா வந்தன. ஆனால் நிச்சயம் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என படக்குழுவினர் தெரிவித்தனர். அதன்படி மாஸ்டர் படத்தை ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மாஸ்டர் படத்தின் ஒரு காட்சியில் மட்டும் அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு ட்விட்டர் நிறுவனம் புதிய எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை விஜய் அவரது ட்விட்டர் வாயிலாக அறிவித்துள்ளார். மாஸ்டர் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பதிவிடும்போது இந்த எமோஜி தானாகவே வரும். விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த எமோஜியை பதிவிட்டு அதகளப்படுத்திவருகின்றனர்.