‘பரம்பரையிலேயே முதல் கார்’ : விஜய் டிவி புகழை கொண்டாடும் ரசிகர்கள்!

 

‘பரம்பரையிலேயே முதல் கார்’ : விஜய் டிவி புகழை கொண்டாடும் ரசிகர்கள்!

விஜய் டிவியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த புகழ் கார் வாங்கியதற்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீப காலமாக ‘குக் வித் கோமாளி’ என்ற சமையல் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருக்கிறது. கடந்த சீசனை காட்டிலும் இந்த சீசனுக்கு வரவேற்பு அதிகம் என்றே சொல்லலாம். இந்த சீசனில் ஷகிலா, பாபா பாஸ்கர், அஷ்வின், பவித்ரா உள்ளிட்டோர் குக்குளாக போட்டியிட, அவர்களுக்கு கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பாலா உள்ளிட்டோர் களமிறங்கி நிகழ்ச்சியை வேற லெவெலில் தூக்கி நிறுத்தியுள்ளனர். அதிக டி.ஆர்.பி ரேட்டிங் கொண்ட ஷோ இது தானாம். இந்த நிகழ்ச்சிக்கென சோஷியல் மீடியாக்களில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

‘பரம்பரையிலேயே முதல் கார்’ : விஜய் டிவி புகழை கொண்டாடும் ரசிகர்கள்!

குறிப்பாக புகழ், சிவாங்கிக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். சினிமா பின்புலமே இல்லாத ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து டிவிக்கு வந்த புகழ், உண்மையிலேயே புகழின் உச்சிக்கே சென்றிருக்கிறார். இவரின் வெற்றியை மக்கள் தங்களது வெற்றியை போல கொண்டாடி வருகிறார்கள். நேற்று முன்தினம் அவர் பிளாக் ஷீப்பில் விருது வாங்கியது வைரலானது.

‘பரம்பரையிலேயே முதல் கார்’ : விஜய் டிவி புகழை கொண்டாடும் ரசிகர்கள்!

இந்த நிலையில், புகழ் தனக்கு சொந்தமாக கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகழ், என் பரம்பரையிலேயே நான் தான் முதலில் கார் வாங்கியிருக்கிறேன். என் குடும்பத்தில் எல்லாரும் டிரைவராக தான் வேலை பார்த்தார்கள். கார் வாஷ் செய்யும் வேலை பார்த்த நான், இப்போது சொந்தமாக கார் வாங்கியது பெருமையாக இருக்கிறது. உங்களால் மட்டுமே இது சாத்தியம். இதை பார்த்ததும் அம்மா அழுதுட்டாங்க.

குக் வித் கோமாளி டீமில் இருப்பவர்கள் என்னை கட்டிபிடித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். எந்த உயரத்துக்கு போனாலும் இதை நான் மறக்க மாட்டேன் என்று உருக்கமாக தெரிவித்திருக்கிறார். சாதாரண மனிதனாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய புகழின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.