முதலமைச்சர் தாயார் மறைவையொட்டி அவருக்கு விஜய் சேதுபதி நேரில் ஆறுதல்!

 

முதலமைச்சர் தாயார் மறைவையொட்டி அவருக்கு விஜய் சேதுபதி நேரில் ஆறுதல்!

வயது முதிர்வால் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் தவுசாயம்மாளின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், 3ம் நாள் சடங்கில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனால் கடந்த ஒரு வாரமாக சேலத்தில் இருந்த முதல்வர் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

முதலமைச்சர் தாயார் மறைவையொட்டி அவருக்கு விஜய் சேதுபதி நேரில் ஆறுதல்!

இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி, அவருக்கு ஆறுதலையும் இரங்கலையும் கூறினார். தொடர்ந்து முதல்வர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.