தலைவன் இருக்கிறான் அப்டேட்: கமலுடன் இணையும் விஜய் சேதுபதி!

 

தலைவன் இருக்கிறான் அப்டேட்: கமலுடன் இணையும் விஜய் சேதுபதி!

நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்களைத் தொடர்ந்து ‘தலைவன் இருக்கிறான்’  படத்தில் நடிக்கவுள்ளதாக 3 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியாகியது. ஆனால், விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு திட்டமிட்டபடி சபாஷ் நாயுடு படத்தை எடுக்க முடியவில்லை. இதை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கமல் –ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 பட அறிவிப்பு வெளியானது. அந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் கமல்ஹாசன் அரசியல் , கட்சி, தேர்தல், பிக்பாஸ் நிகழ்ச்சி என்று பிஸியானதால் தலைவன் இருக்கிறான் கிடப்பில் போடப்பட்டது.

தலைவன் இருக்கிறான் அப்டேட்: கமலுடன் இணையும் விஜய் சேதுபதி!

இந்நிலையில் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தில் நடிகர் நாசரின் மகன் கதாப்பாத்திரத்திலேயே நடிகர் விஜய் சேதுபதி நடிப்பார் என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.