புரட்சித்தலைவரான விஜய், புரட்சித்தலைவியான சங்கீதா! மதுரையில் வைரலாகும் போஸ்டர்…

 

புரட்சித்தலைவரான விஜய், புரட்சித்தலைவியான சங்கீதா! மதுரையில் வைரலாகும் போஸ்டர்…

விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி என சித்தரித்து மதுரையில் ஓட்டப்பட்ட போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதாவுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதனைக் கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் நலத்திட்டங்கள் வழங்கியும் அன்னதானம் வழங்கியும் போஸ்டர்கள் மூலமாகவும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனொரு பகுதியாக மதுரையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் மக்கள் இயக்கத்தின் புரட்சிதலைவர் விஜய் என்றும் புரட்சித்தலைவி சங்கீதா என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது, இந்த போஸ்டரில் நடிகர் விஜயின் உருவப்படத்தை எம்ஜிஆர் போன்றும் அவரது மனைவி சங்கீதாவின் உருவப்படத்தை ஜெயலலிதாவாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புரட்சித்தலைவரான விஜய், புரட்சித்தலைவியான சங்கீதா! மதுரையில் வைரலாகும் போஸ்டர்…
IMAGE CREDITS: THANTHI

சமீபகாலமாக நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவியை சமூக வலைதளங்களில் தவறாக விமர்சித்து வீடியோக்கள் வெளியாகி கொண்டிருக்கக் கூடிய நிலையில், மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் மூலம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுநாள் வரை நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரவேண்டுமென்று அவர் ரசிகர்கள் விருப்பத்தை தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவரது மனைவி சங்கீதாவையும் அரசியலுக்கு வரவேற்றுள்ளனர் அவரது ரசிகர்கள்.