• April
    03
    Friday

Main Area

Main



தளபதி 63 அப்டேட்: விஜய் பெயர் மைக்கேல் இல்லையாம் பா... உண்மையான பெயர் இது தான்!

விஜய்
விஜய்

சென்னை: தளபதி 63 படத்தில் விஜய்யின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தெறி,மெர்சல் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் -  அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். 

vj

இதில் விஜய் அப்பா, மகன் என்று இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், இரண்டு விஜய்யும் இணைந்து தோன்றும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் விஜய்யின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில்  விஜய்யின் பெயர் 'பிகில்' என்று கூறப்படுகிறது. முன்னதாக இதில் அவர் பெயர் மைக்கேல் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் மைக்கேல் என்பது விஜய்யின் நண்பனாக வரும் கதிரின் பெயர் தான் என்று கூறப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.