• April
    06
    Monday

Main Area

Main



நான் கடனை திரும்பி செலுத்துவதை வங்கிகள் ஏற்க மறுப்பது ஏன்?-விஜய் மல்லையா கேள்வி

vijaymallya
vijaymallya

லண்டன்: வங்கிகளில் நான் வாங்கிய கடனை 100 சதவீதம் திருப்பிச் செலுத்துவதை வங்கிகள் ஏற்க மறுப்பது ஏன் என தொழிலதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய வங்கிகள் பலவற்றிலும் ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகள் உலகளாவிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தன. அதனை இங்கிலாந்திலும் பதிவு செய்தன. இதையடுத்து, லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா முறையிட்டார். ஆனால், தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அத்துடன், விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதியும் வழங்கியது.

அதேபோல், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரி வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு வெஸ்ட்மினிஸ்டர்ஸ் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு சில தினங்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வங்கிகளில் நான் வாங்கிய கடனை 100 சதவீதம் திருப்பிச் செலுத்துவதை வங்கிகள் ஏற்க மறுப்பது ஏன் என தொழிலதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுத்துறை வங்கிகளின் பணத்தை கொள்ளையடித்து திரும்ப செலுத்தாமல் ஓடி விட்டதாக அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தொடர்ந்து எனக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றன என குற்றம் சாட்டியுள்ள மல்லையா, விமான எரிபொருள் விலை அதிகரித்ததால், கிங்பிஷர் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. வங்கியில் கடனாக வாங்கிய பணம் நஷ்டமானது. நான் கடனாக வாங்கிய அசல் தொகை 100 சதவீதத்தையும் தந்து விடுகிறேன் என தொடர்ந்து கூறி வருகிறேன் அதனை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.