விஜய் மல்லையா மும்பை சிறையில் அடைக்கப்பட்டாரா? – சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி

வெளிநாடு தப்பிச் சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வேகமாக பரவி வருகிறது. இந்த தகவலை இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.

விஜய் மல்லையா
பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பியவர் விஜய் மல்லையா. அவரை இந்தியா அழைத்துவர சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜய் மல்லையாவின் கோரிக்கையை இங்கிலாந்து நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில், அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார், மும்பையில் உள்ள ஆர்தர் காட்டன் சிறையில் அடைக்கப்பட்டார் என்று எல்லாம் பல தகவல்கள் சமூக ஊடக பக்கங்களில் வெளியாகின.
ஆனால் இந்த தகவலை இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மறுத்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில், விஜய் மல்லையா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார். ஆனால், அதற்கு முன்பு இன்னும் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. அவற்றை கலைவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விஜய் மல்லையாவுக்கான அனைத்து சட்ட உதவிகளும் முடிந்துவிட்டன. விஜய் மல்லையா எப்போது இந்தியாவுக்கு அழைத்து வருவார் என்று இப்போது கூற முடியாது. அதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பதும் கணிக்க முடியாது. முடிந்த வரையில் விரைவாக அவரை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Most Popular

2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்கள் போல் கோவா மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நிதி நெருக்கடியால்...

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...
Do NOT follow this link or you will be banned from the site!