darbar
  • January
    25
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

Vijay Mallya

விஜய் மல்லையா

வாங்கிய வங்கிக்கடனில் இன்னும் 1 ரூபாய் கூட மல்லையா செலுத்தவில்லை - மத்திய அரசு

வங்கியில் வாங்கிய கடனில் 1 ரூபாய் கூட திருப்பி செலுத்தவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 


விஜய் மல்லையா

விஜய் மல்லையாவுக்கு அடுத்த அடி! கடனை வசூலிக்க அசையும் சொத்துக்களை விற்க வங்கிகளுக்கு அனுமதி!

விஜய் மல்லையாவின் அசையும் சொத்துக்களை விற்பனை செய்து அவரது கடனை வசூல் செய்து கொள்ள வங்கி கூட்டமைப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


vijay mallya

என் கடனையெல்லாம் திருப்பிக்கொடுக்க நான் ரெடி-  விஜய் மல்லையா அதிரடி ட்வீட்!

வங்கிகளில் தான் பெற்ற கடன் தொகை அனைத்தையும் திருப்பி செலுத்த தயாராக இருப்பதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.


விஜய் மல்லையா

அமலாக்கத்துறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வழக்கு

வெளிநாட்டுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, இந்தியாவில் தனது அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை எடுத்துள்ள முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார...


Vijay Mallya

9000 கோடி மோசடி பன்னிட்டு உலகக் கோப்பை போட்டியை கண்டுகளிக்கும் மல்லையா!

9000 கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள மல்லையா, லண்டனில் நடைபெற்றுவரும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை ஆட்டத்தை ஓவல் மைதானத்தில் உற்சாகத்துடன் ...


Not Allowed to Board

"எங்கம்மா சத்தியமா நான் தப்பிச்சு போகலய்யா" என கதறியும் நம்பாத விமான நிலைய அதிகாரிகள்

நிறுவனத்தின் வருமானத்தை 25,000 கோடி ரூபாயாக கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ், கூடவே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களுக்கு கடனையும் வைத்திருந்தது. கடைசியாக, வெறும் 400 கோடி ரூபாயை உடனடியாக புரட்...


விஜய் மல்லையா

நான் ஓடிப்போகல: பாஜகவினர் விமர்சனத்தால் மனம் நொந்த விஜய் மல்லையா

கிங் பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அதற்கு பாஜவினர், கடன் வாங்கிட்டு ஓடிப்போ...


விஜய் மல்லையா

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பங்குகள் ரூ.1008 கோடிக்கு விற்பனை!

இந்திய வங்கிகள் பலவற்றிலும் ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பிச் ச...


விஜய் மல்லையா

பாஜக அரசின் கீழ் பொதுத்துறை வங்கிகள் இரட்டை நிலைப்பாடு; விஜய் மல்லையா கடும் சாடல்!

நான் கடனாக வாங்கிய அசல் தொகை 100 சதவீதத்தையும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் முன்பு சமர்ப்பிக்கிறேன் என தொடர்ந்து கூறி வருகிறேன். ஆனால், வங்கிகள் நான் திரும்பச் செலுத்துவதாக கூறும் ...

மல்லையா போன்று நிரவ் மோடியை நாடு கடத்துவதில் தாமதம் இருக்காது; விசாரணை அமைப்புகள்!

புதுதில்லி: விஜய் மல்லையா போன்று நிரவ் மோடியை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்படாது என விசாரணை அமைப்புகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இந்திய வங்கிகள் பலவற்றிலும் ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா, கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் லண்டனில் வசித்து வருகிறார்.

அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.ஆனால், அதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளதால் அவரை நாடு கடத்துவதில் இழுபறி நீடித்து வருகிறது.

vijay mallya

அதேபோல், ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோத பரிவர்த்தனையும், ரூ.280 கோடி மோசடி செய்ததாகவும் குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. ஆனால், அவரும் நாட்டை விட்டு கடந்த ஆண்டே வெளியேறி விட்டார். இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நிரவ் மோடி பல்வேறு நாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார் என தகவல்கள் வெளியான நிலையில், அவர் லண்டனில் வசிப்பதாக பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான 'தி டெலிகிராப்' செய்தி வெளியிட்டது.

niravmodi

இதையடுத்து, நிரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த மனுவில் சமீபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. தொடர்ந்து நிரவ் மோடி லண்டனில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், நிரவ் மோடியை வருகிற 29-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டு அன்றைய தினத்துக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், விஜய் மல்லையாவை நாடு கடத்தற்கு செய்யப்பட்ட முயற்சிகள் மூலம் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஒருவரை நாடு கடத்துவதற்கான செயல்முறைகளை நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது. நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் இங்கிலாந்து அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு, ஓட்டைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டதால், விஜய் மல்லையா போன்று நிரவ் மோடியை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்படாது என விசாரணை அமைப்புகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அளித்த ஆதாரங்கள் அனைத்தும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டதால் தான் நிரவ் மோடிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நிரவ் மோடியின் வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. பிரிட்டனில் நடக்கும் வழக்கு விசாரணையின் முன்னேற்றங்கள், அவரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என முத்திரை குத்த உதவும் எனவும் விசாரணை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், நிரவ் மோடியின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் வரும் போது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜராவார்களா என்பது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. ஏனெனில் வழக்கு விசாரணைக்கு உதவி தேவை என்ற கோரிக்கை அவர்களுக்கு இதுவரை வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

smprabu Thu, 03/21/2019 - 21:36
Nirav Modi CBI Vijay Mallya london court கோப்புப்படம் இந்தியா

English Title

Unlike Vijay Mallya, Probe Agency Hopes For Quick Nirav Modi Extradition

News Order

0

Ticker

0 
vijaymallya

இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி; விஜய் மல்லையா மேல்முறையீடு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்vijay mallya

விஜய் மல்லையா தப்பியோடிய பொருளாதார குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி

விஜய் மல்லையா தப்பியோடிய குற்றவாளி என பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது


vijaymallya

நான் கடனை திரும்பி செலுத்துவதை வங்கிகள் ஏற்க மறுப்பது ஏன்?-விஜய் மல்லையா கேள்வி

வங்கிகளில் நான் வாங்கிய கடனை 100 சதவீதம் திருப்பிச் செலுத்துவதை வங்கிகள் ஏற்க மறுப்பது ஏன் என தொழிலதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்

2018 TopTamilNews. All rights reserved.