விஜய் மக்கள் இயக்கத் தலைவர் ஆர்.கே.ராஜா உறவினர்களிடம் போலீசார் விசாரணை

 

விஜய் மக்கள் இயக்கத்  தலைவர் ஆர்.கே.ராஜா உறவினர்களிடம் போலீசார் விசாரணை

நடிகர் விஜயின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக அளித்த புகாரின் பேரில், விஜய் மக்கள் இயக்க கட்சியின் மாநில தலைவர் ஆர்.கே.ராஜாவின் மனைவி மற்றும் உறவினர்களிடம் திருச்சி மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய விஜய் மக்கள் இயக்க கட்சியின் மாநில தலைவராக உள்ளவர், திருச்சியை சேர்ந்த பத்மநாபன் என்ற ஆர்.கே.ராஜா.

விஜய் மக்கள் இயக்கத்  தலைவர் ஆர்.கே.ராஜா உறவினர்களிடம் போலீசார் விசாரணை

இவர் திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், விஜய்யின் பெயரை தவறாக பயன்படுத்துவதாக கடந்த வாரம் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஆர்.கே.ராஜா தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி விஜய் ரசிகர் ரவிசங்கர் என்பவரும் புகார் அளித்தார். இந்த புகார்கள் தொடர்பாக, ஆர்.கே.ராஜாவை விசாரணைக்கு அழைத்துச்செல்ல காவல்துறையினர் சென்றபோது, ஆர்.கே.ராஜா வீட்டில் இல்லாததால், அவரது மனைவி, மாமனார் மற்றும் மைத்துனர் ஆகியோரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் மக்கள் இயக்கத்  தலைவர் ஆர்.கே.ராஜா உறவினர்களிடம் போலீசார் விசாரணை

இதுகுறித்து பேசிய ஆர்.கே.ராஜாவின் வழக்கறிஞர் கிஷோர் குமார், விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவராக ஆர்.கே ராஜாவை, எஸ்.ஏ.சந்திரசேகர் நியமனம் செய்ததில் இருந்து, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் பிரச்சினைகள் நிலவி வருவதாக தெரிவித்தார். இதனால் கடந்த 2014ஆம் ஆண்டு இடம் தொடர்பான பிரச்சினையை தற்போது கையில் எடுத்து, ஆர்.கே ராஜாவின் குடும்பத்தினரை போலீசார் அழைத்துச்சென்று விசாரணை செய்வதை ஏற்க முடியாது என்றும் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் விஜய் தலையிட்டு பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என கேட்டுகொண்ட அவர், இந்த பிரச்சினைக்கு புஸ்ஸி ஆனந்தே காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.

இதனிடையே புகாருக்கு உள்ளான ஆர்.கே.ராஜா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புஸ்ஸி ஆனந்தால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லாத நிலையில் புஸ்ஸி ஆனந்தின் அழுத்தம் காரணமாக போலீசார் தன்னை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.