இழப்பீடு தாங்க அல்லது பட்டாசுகளை வாங்குங்க… கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் பட்டாசு கடைக்காரர்கள்

இழப்பீடு தாங்க அல்லது பட்டாசுகளை வாங்குங்க… கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் பட்டாசு கடைக்காரர்கள்

திடீரென பட்டாசு வெடிக்க தடை விதித்ததால், இழப்பீடு தாங்க அல்லது பட்டாசுகளை வாங்கிக்கோங்க என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அரசுக்கு பட்டாசு வர்த்தகர்கள் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர்.

டெல்லியில் பசுமை பட்டாசுகள் உள்பட அனைத்து விதமான பட்டாசுகளும் வெடிக்க முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு தடை விதித்ததுள்ளது. டெல்லி அரசு சில மாதங்களுக்கு முன்பே பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கி விட்டு, தற்போது திடீரென பட்டாசு வெடிக்க தடை விதித்ததால் பட்டாசு வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்பதால் மிகவும் கலக்கம் அடைந்தனர்.

இழப்பீடு தாங்க அல்லது பட்டாசுகளை வாங்குங்க… கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் பட்டாசு கடைக்காரர்கள்
பட்டாசு வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம்

இதனால் டெல்லியில் நேற்று பட்டாசு வெடிப்பதற்கு விதித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடையால் ஏற்படும் வர்த்தகத்துக்கு இழப்பீடு கோரியும் பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய் கோயல் தலைமையில் பட்டாசு வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக விஜய் கோயல் கூறியதாவது: அரசாங்கம் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டியிருந்தால், இரண்டு மாதங்களுக்கு முன்பே தலைநகரில் பசுமை பட்டாசுகள் விற்பனை செய்ய ஏன் உரிமம் வழங்கியது?.

இழப்பீடு தாங்க அல்லது பட்டாசுகளை வாங்குங்க… கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் பட்டாசு கடைக்காரர்கள்
பட்டாசு வெடிக்க தடை

தற்போது இந்த வர்த்தகர்கள் ஏற்கனவே பசுமை பட்டாசுகளை வாங்கி விட்டனர். அவற்றை எங்கே விற்பது என்று தெரியவில்லை. இந்த வர்த்தகர்களுக்கு மாநில அரசு கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தற்காலிக பட்டாசு வர்த்தகர்கள் சங்கமான ஜமா மஸ்ஜித்தின் தலைவர் டி.கே. ஜெயின் கூறுகையில், அரசு எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது எங்களிடமிருந்து அனைத்து பசுமை பட்டாசுகளையும் அவர்கள் வாங்கி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.