“எல்லா தேர்தலிலும் அடிவாங்கும் உனக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு? ” சீமானுக்கு எதிராக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்!

 

“எல்லா தேர்தலிலும் அடிவாங்கும் உனக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு? ” சீமானுக்கு எதிராக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்!

சீமான் விஜய் குறித்து விமர்சனம் செய்ததற்கு அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் எம்ஜிஆர் அதனால் அவரை மதிக்கிறோம். மற்றபடி எம்ஜிஆர் என்ன சிறந்த ஆட்சியை தந்தார்? கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு கொடுத்தது எம் . ஜி . ஆர் .

“எல்லா தேர்தலிலும் அடிவாங்கும் உனக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு? ” சீமானுக்கு எதிராக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்!

முல்லை பெரியாறு உரிமையை கேரளாவிற்கு கொடுத்தது எம்ஜி ஆர். பரப்புரையில் எம்ஜிஆர் குறித்து பேசினால், அதிமுகவின் இரட்டை இலைக்கும் தான் ஓட்டு போடுவார்கள். அரசியலே தெரியாமல் பேசும் கமல் மக்களை கேவலமாக நினைக்கிறார். தேர்தலில் ரஜினி கமலுக்கு கிடைக்கும் அடி, எந்த நடிகர்களும் அரசியலுக்கு வரவே பயப்பட வேண்டும். அவர்களை அடிக்கிற அடியில் விஜய் கூட அரசியலுக்கு வர பயப்பட வேண்டும்”என்றார். எம்ஜிஆர் குறித்து சீமான் விமர்சனம் செய்ததற்கு அதிமுக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

“எல்லா தேர்தலிலும் அடிவாங்கும் உனக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு? ” சீமானுக்கு எதிராக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்!

இந்நிலையில் விஜய் ரசிகர்களும் சீமானுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். மதுரை முழுவதும் சீமானை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், எல்லா தேர்தலிலும் அடிவாங்கும் உனக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு ?உடனடியாக மன்னிப்பு கேள்… இது எச்சரிக்கை அல்ல கட்டளை, என்றும்
பெரியார் பேரன் என்றாய்; முப்பாட்டன் முருகன் என்றாய் ; மணந்தால் ஈழப் பெண்ணை தான் மணப்பேன் என்றாய் ;

“எல்லா தேர்தலிலும் அடிவாங்கும் உனக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு? ” சீமானுக்கு எதிராக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்!

ஈழ அரசியலை வைத்து பணம் சம்பாதிக்கும் கொள்கை இல்லாத சீமானே எங்கள் தளபதி பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி? உடனடியாக மன்னிப்பு கேள் என்பது போன்ற வாசகங்கள் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது .