விஜய்க்கு சிலை வைத்த மக்கள் மன்ற நிர்வாகிகள்

 

விஜய்க்கு சிலை வைத்த மக்கள் மன்ற நிர்வாகிகள்

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த விழுப்புரம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜயின் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது புதிய பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விஜய்க்கு சிலை வைத்த மக்கள் மன்ற நிர்வாகிகள்

இந்நிலையில் கர்நாடக மாநில விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜயின் முழு உருவ சிலை விஜய்க்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சிலை பனையூர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டாடிவருகின்றனர்.

நடிகர் விஜயின் சொகுசு கார் வரி விலக்கு வழக்கில் மேல்முறையீடு மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.