• April
    03
    Friday

Main Area

Main



விஜய் ரசிகர்கள் இருவர் கைது: காரணம் இதுதான்!

வீரன் மற்றும் சரத்குமார்
வீரன் மற்றும் சரத்குமார்

போலீஸ் குறித்து அவதூறாக பேசிய  விஜய் ரசிகர்கள் இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

bigil

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த  வீரன் மற்றும் சரத்குமார் இருவரும் தீவிர விஜய் ரசிகர்கள். இவர்கள்  இருவரும் விஜய்க்கு மன்றம் வைக்கும் எண்ணத்தில் இருந்துள்ளனர். இது தொடர்பாக  செல்போனில் பேசிய போது, மன்றம் வைக்க போலீசில் அனுமதி  வாங்க வேண்டும் என்று ஒருவர் சொல்ல, போலீசிடம் அனுமதியெல்லாம் வாங்க முடியாது என்று கூறியதுடன் தகாத வார்த்தையால், அவதூறாகவும் பேசியுள்ளனர். இவர்கள் பேசிய இந்த ஆடியோ பதிவு வாட்ஸ்ஆப்பில் வெளியாகி வேகமாக பரவியது.  

arrested


இந்நிலையில் இந்த  ஆடியோ விவகாரம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியம் பாஸ்கர் ராஜ் அனந்தபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வீரன் மற்றும் சரத்குமாரை  கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் . 
 

2018 TopTamilNews. All rights reserved.