kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


பாலிடிக்ஸில் களமிறங்கும் விஜய் ஆண்டனி

vijay antony
vijay antony
Loading...

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படம் பாலிடிக்ஸில் படமாக உருவாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காளி, திமிரு புடிச்சவன் படங்களை தொடர்ந்து  ‘கொலைகாரன்’, ‘அக்னிச் சிறகுகள்’ என இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதைத்தொடர்ந்து  தற்போது மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் பாலிடிக்ஸ் என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், ராஜா தயாரிக்கவுள்ள இப்படம் குறித்த தகவலை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து அத்துடன் அப்படத்தின் போஸ்டரையும் பதிவு செய்துள்ளார். பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் 'தமிழரசன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் 'பாலிடிக்ஸ்' படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.