• April
    03
    Friday

Main Area

Main



#Vijay63 என்னுடைய கதை: அட்லீ மீது புகார் அளித்த இயக்குநர்?!..

விஜய் - அட்லீ
விஜய் - அட்லீ

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. ராஜா ராணி படம் வெகுவாக பாராட்டப்பட்டாலும், அது மணிரத்னத்தின் மௌன ராகம் படத்தை தழுவி எடுக்கப்பட்டது என பலரும் விமர்சனம் செய்தனர். அடுத்ததாக அவர் எடுத்த ‘தெறி’ படமும் விஜயகாந்தின் ‘சத்ரியன்’ என்று கூறப்பட்டது. ‘மெர்சல்’ படத்தையும் ரஜினியின் ‘மூன்று முகம்’ என்று விமர்சனம் செய்தார்கள். இந்நிலையில் அவருடைய அடுத்த படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

afdsf

அட்லீ இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் படம் விஜய் 63. அந்த படத்தின் கதை என்னுடையது என திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் செல்வா எனும் இயக்குநர் புகார் அளித்துள்ளார். பெண்கள் புட்பால் விளையாட்டை மையப்படுத்தி தான் எடுத்த குறும்படத்தைதான் அட்லீ படமாக இயக்கி வருகிறார் என குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் எழுத்தாளர் சங்கம் அவருடைய புகாரை ஏற்கவில்லை.

dv

செல்வா, திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் சேர்ந்து  6 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. சங்க விதிகளின்படி, புகார் அளிக்க வருபவர் 6 மாதங்களுக்கு முன்பே சங்கத்தில் உறுப்பினராக இருக்கவேண்டும், அதனால் புகாரை ஏற்க முடியாது என மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தை செல்வா நாடி இருக்கிறார், வெகு விரைவில் அட்லீயை கோர்ட்டில் சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

இதையும் வாசிக்க: பொறுமையை இழந்த 'கூல் கேப்டன்': அம்பயரிடம் கடும் வாக்குவாதம்; அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

2018 TopTamilNews. All rights reserved.