darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



நீ நேர்மையானவள்...நயன்தாராவை உருகவைக்கும் விக்னேஷ் சிவனின் காதல் பதிவு!

நயன்தாரா
நயன்தாரா

நடிகர்களின் ஆளுமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியம். ஆனால், தான் அறிமுகமான நாளிலிருந்து தற்போது வரை உச்ச இடத்திலேயே நிற்கிறார் நயன்தாரா.

nayan

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நயன்தாரா தனது 35வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். தனது காதலருடன் நியூயார்க்  பறந்துள்ள நயன் அங்கு தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

nayan

இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு அவரது காதலர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  நயன்தாராவுக்கு வாழ்த்து கூறியுள்ள அவர், நீ நேர்மையானவள் தைரியமானவள்,  வலிமையானவள், லட்சியமானவள், ஒழுக்கமானவள், நேர்மையானவள்,  கடின உழைப்பாளி, கடவுள் பக்தியும்  பயமும் உள்ளவள்.. நீ வாழ்க்கையில் இன்னும் பல சாதனைகள் புரியவேண்டும். உன்னுடன் வாழ்வின் சிறந்த தருணங்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எப்போது நீ  பிரமிப்பானவள்...என்று பதிவிட்டுள்ளார். 

விக்னேஷ் சிவனின்  இந்த வாழ்த்துக்கு  நயனின் ரசிகர்கள் சீக்கிரம் தலைவியை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.