உசேன் போல்டுக்கு கொரோனா… வதந்தியா, உண்மையா? அவரே வெளியிட்ட வீடியோ

 

உசேன் போல்டுக்கு கொரோனா… வதந்தியா, உண்மையா? அவரே வெளியிட்ட வீடியோ

மின்னல் வேக ஓட்டத்திற்கு உதாரணம் உசேன் போல்ட். ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த இந்த ஓட்ட நாயகன் ஒலிம்பிக்கில் எவராலும் விஞ்ச முடியாத சாதனைகளைச் செய்தவர். தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே வீரர் உசேன் போல்ட் மட்டுமே. ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமே எட்டு தங்கங்களை வென்றவர்.

2017 ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற IAAF தடகளப்போட்டியில் உசேன் போல்ட்டை ஜஸ்டின் கேட்லின் தோற்கடித்தார். ஆனால், ஜஸ்டின் கேட்லின் வெற்றி மேடை ஏறும்முன் உசேன் போல்ட் முன் மண்டியிட்டு மரியாதை செலுத்தினார்.

உசேன் போல்டுக்கு கொரோனா… வதந்தியா, உண்மையா? அவரே வெளியிட்ட வீடியோ

தற்போதைய செய்தி அவரின் சாதனை குறித்து அல்ல. அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

நான்கு நாட்களுக்கு முன் உசேன் போல்ட்டின் பிறந்த நாள். அதை குடும்பத்துடன் கொண்டாடினார் உசேன் போல்ட். அப்போது வெளியான வீடியோவில் அவ்விழாவில் பலரும் மாஸ்க் அணியாமல் கலந்துகொண்டது தெரியவந்தது.

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவால், உசேன் போல்ட்டுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகச் செய்தி பரவியது. இந்த நிலையில் இது உண்மையா… வதந்தியா? என்ற குழப்பமும் நிலவியது. அதனால், உசேன் போல்ட் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

“எனக்கு எவ்வித கொரோனா அறிகுறிகளும் இல்லை. ஆனாலும் கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளேன். அதன் முடிவு வரும் வரை என்னை நானே தனிமைப் படுத்திக்கொண்டுள்ளேன்’ என்பதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.