‘எப்படி இருக்கிறேன்’ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட வீடியோ

 

‘எப்படி இருக்கிறேன்’ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட வீடியோ

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ம் தேதி தேர்தல். அதனால், பல இடங்களில் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரோடு எப்போதும் அவரின் மனைவி மெலானியா உடன் செல்கிறார். இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் முதன்மை உதவியாளர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன.

ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் அதிபர் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொள்ளும்போடு உடன் இருந்தவர். அதனால், ட்ரம்ப்க்கும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப்க்கும் பரிசோதனை செய்ததில் இருவரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து வரப்படுகிறது.

‘எப்படி இருக்கிறேன்’ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட வீடியோ

இந்நிலையில் ட்ரம்ப் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் ’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறேன். நான் தற்போது நலமாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என பல நாட்டுத் தலைவர்களும் செய்திகள் அனுப்பி வருகின்றனர். அநேகமாக இன்னும் ஒரு வாரம் ட்ரம்ப் ஓய்வில் இருப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், அவர் திட்டமிட்டிருந்த தேர்தல் பிரசாரத் திட்டத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளது.