“ஆங்கில மொழியிலும் வீடியோ பாடங்கள்” கல்வி டிவியில் இன்று முதல் ஒளிபரப்பு!

 

“ஆங்கில மொழியிலும் வீடியோ பாடங்கள்” கல்வி டிவியில் இன்று முதல் ஒளிபரப்பு!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கடந்த ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல் மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன. அரசு பள்ளிகள் மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் பயன்பெறும் வகையில் கல்வி டிவியில் படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

“ஆங்கில மொழியிலும் வீடியோ பாடங்கள்” கல்வி டிவியில் இன்று முதல் ஒளிபரப்பு!

இந்நிலையில் கல்வித் தொலைக்காட்சியில் இதுவரை தமிழ் மொழியில் மட்டும் பாடங்கள் அடங்கிய வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில், ஆங்கில மொழியிலும் வீடியோ பாடங்கள் இன்று முதல் ஒளிபரப்பப்படுகிறது. பாடங்களைப் பற்றிய கேள்வி – பதில் முறையும் அமலாகிறது; சரியான பதிலை சொல்லக்கூடிய மாணவர்களின் பெயர்கள் மறுநாள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஆங்கில மொழியிலும் வீடியோ பாடங்கள்” கல்வி டிவியில் இன்று முதல் ஒளிபரப்பு!

முன்னதாக கல்வி தொலைக்காட்சியில் 2021-22ம் கல்வியாண்டுக்கான புதிய கல்வி ஆண்டுக்கான பாடத் திட்டத்தை தொங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.