வீடியோ விவகாரம் – வானதி சீனிவாசனின் வருத்தம்

 

வீடியோ விவகாரம் – வானதி சீனிவாசனின் வருத்தம்

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் பாஜகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்களில் வானதி சீனிவாசன் சட்டமன்றத்தை 100% பயன்படுத்திக் கொண்டேன் என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். ஆனாலும் முதல் கூட்டத்தொடரின் அனுபவங்களை பகிர்ந்து இருக்கும் அவர் ஒரு சில வருத்தங்களையும் பதிவு செய்திருக்கிறார்.

வீடியோ விவகாரம் – வானதி சீனிவாசனின் வருத்தம்

சட்டப்பேரவையில் முதல் முறையாக ஒரு உறுப்பினர் பேசுவதை கன்னி பேச்சு என்று குறிப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. இளம்பெண்களின் பெண்மையை குறிக்கும் இந்த வார்த்தைக்கு பதிலாக முதல் பேச்சு, அறிமுக உரை என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தேன். இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக பேரவைத்தலைவர் அப்பாவும் பதிலளித்திருந்தார். ஆனால், கடைசிவரை எனது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

வீடியோ விவகாரம் – வானதி சீனிவாசனின் வருத்தம்

திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அதனை செயல்படுத்தாமல் இருக்கிறார்கள். அதனால்தான் சட்டப்பேரவை நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

மாநில தலைவர் அண்ணாமலையும் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது இப்படியிருக்க சட்டப்பேரவை மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பேசும் வீடியோக்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன . அந்த வீடியோக்களை அவர்கள் சமூக ஊடங்களில் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் வீடியோக்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.