• February
    29
    Saturday

Main Area

Main



72 வயது பாட்டியின் வீடியோ… எகிறும் லைக்ஸ் அண்ட்  ஷேரிங்.!?

 ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா

ஒரு 72 வயது பாட்டி… என்று சொன்னதும் பாரதிராஜா படங்களில் வரும் காதுகளில் தண்டட்டி போட்டுக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்து வெத்தலை,பாக்கை போட்டுக் கொதப்பியபடி… ஊரில் நடக்கும் வம்பு தும்புகளை அலசும் பாட்டி ‘சட்’டென்று ஞாபகத்துக்கு வந்து போனால் உங்களை தமிழ் சினிமா ரொம்பவே கெடுத்து வச்சிருக்கு என்று அர்த்தம்! ஆனால், இப்போது மீடியாக்களில் பரபரப்பு பற்ற வைத்திருக்கும் இந்தப் பாட்டி வேற லெவல்! 

mahendra

72 வயதாகும் பாட்டி ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பார்த்து அசந்து போன  'நாண்டி பௌண்டேஷனின்' சிஇஓ  மனோஜ் குமார் 1 நிமிடம் 28 செகண்டுகள் கொண்ட அந்த வீடியோவை தனது டிவிட்டரில் ஷேர் பண்ணியிருக்கிறார். இதனைப்  பார்த்த மகிந்திரா குரூப்பின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ‘வாவ்’ என்று ஆச்சர்யப்பட்டு  ரீட்வீட் செய்திருக்கிறார்.

இந்த வீடியோவில், 72 வயதாகும் பாட்டி டம்பெல்  தூக்குவது, ஆப் வீல் எக்ஸர்சைஸ் தொடங்கி  வேறு பல கடினமான உடற்பயிற்சிகளையும்  செய்கிறார்.முதலில் இந்த வீடியோவை ஸர் செய்த மனோஜ் குமார்,தனது ட்வீட்டில் ‘ நான் தினசரி செய்யும் உடற்பயிற்சி,யோகாவெல்லாம் ஒண்ணுமே கிடையாது என்று என்னை யோசிக்க வைக்கிற அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.தவிர,வயது என்பது ஜஸ்ட் நம்பர் என்பதை மறுபடியும் நிரூபிக்கிறது இவரது பயிற்சி’ என்று சிலாகித்திருக்கிறார்.

ரீ  ட்வீட்  அடித்த ஆனந்த்  மஹிந்திரா ,’நாம் நமது தினசரி உடற்பயிற்சி நடைமுறைகளைப் பற்றி சாக்குபோக்கு சொல்வதை நிறுத்த வேண்டியது மிகவும் அவசியம்’என்றும் ‘மனோஜ், இந்த விடியோவை காலையில் நீங்கள் எதுக்காக ஷேர் செய்தீங்க!? இந்த இரும்பு பெண்ணுடன் என்னை ஒப்பிடுகையில் நானெல்லாம் ஒண்ணுமே இல்லை’ என்கிற ரேஞ்சில் கமெண்ட்டைத் தட்டிவிட,சோஷியல் மீடியா முழுக்க இன்னைக்கு பாட்டிதான் ட்ரெண்டிங்!

என்ன ப்ரோ,வீடியோவைப் பார்த்ததும் ஜிம்முக்கு போயே ஆகணும்னு முடிவு பண்ணிட்டிங்களா..! பெஸ்ட் ஆஃப் லக்… நியூ இயர் சபதம் மாதிரி ஆகாம இருந்தால் சரிதான்.

2018 TopTamilNews. All rights reserved.