‘ஸ்டெர்லைட் கண்காணிப்பு குழுவில் பாதிக்கப்பட்ட மக்கள்’ : மத்திய அரசு எதிர்ப்பு!

 

‘ஸ்டெர்லைட் கண்காணிப்பு குழுவில் பாதிக்கப்பட்ட மக்கள்’ : மத்திய அரசு எதிர்ப்பு!

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதத்திற்கு தற்காலிகமாக திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதற்கான பிரமாணப்பத்திரத்தை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசு பிரித்து கொடுக்க அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதனை நீதிபதியும் ஆமோதித்தார்.

‘ஸ்டெர்லைட் கண்காணிப்பு குழுவில் பாதிக்கப்பட்ட மக்கள்’ : மத்திய அரசு எதிர்ப்பு!

இதையடுத்து ஸ்டெர்லைட் கண்காணிப்புக் குழுவில் உள்ளூர் மக்கள் இடம்பெறக்கூடாது என வேதாந்தா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதி மக்களால் ஏற்கனவே நிறைய பாதிப்புகளை சந்தித்து வருவதால் கண்காணிப்பு குழுவில் அவர்கள் இடம்பெறக்கூடாது என்று கோரப்பட்டது. வேதாந்தா நிறுவனத்தின் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு அளித்தது. ஸ்டெர்லைட்டை கண்காணிக்கும் குழுவில் உள்ளூர் மக்கள் இடம்பெறக்கூடாது என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

‘ஸ்டெர்லைட் கண்காணிப்பு குழுவில் பாதிக்கப்பட்ட மக்கள்’ : மத்திய அரசு எதிர்ப்பு!

இதற்கு தமிழக அரசு, ஸ்டெர்லைட்டை கண்காணிக்கும் குழுவை அமைப்பது தொடர்பாக நீதிமன்றமே உத்தரவிடலாம். ஆனால், குழுவில் உள்ளூர் மக்களும் இடம் பெறுவது கட்டாயம் என எங்களுக்கு படுகிறது. வாக்கு எண்ணிக்கை நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை விரும்பவில்லை. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்பதால் குழுவில் உள்ளூர் மக்களிடம் பெறலாம் என்று தெரிவித்தது. இதனிடையே, கடுமையாக தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கூடாது என பாதிக்கப்பட்டோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.