இரண்டு விஷயங்களுக்காக துணை ஜனாதிபதி குடும்பம் 10 லட்சம் ரூபாய் நன்கொடை!

 

இரண்டு விஷயங்களுக்காக துணை ஜனாதிபதி குடும்பம் 10 லட்சம் ரூபாய் நன்கொடை!

கொரோனா நோய்த் தொற்று தாக்குதல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் செலவுகளுக்கு நிதி திரட்டி வருகின்றனர். இது அல்லாது பொதுநிவாரண நிதியிலும் பொதுமக்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு குடும்பத்தினர் இரு விஷயங்களுக்காக நிதி அளித்துள்ளனர்.

இந்திய குடியரசுத் துணைத்தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு குடும்ப உறுப்பினர்கள் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்திற்கு உதவியாகவும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு என்றும்ம் நன்கொடையாக ரூ.10 லட்சத்தை இன்று வழங்கினர்.

இரண்டு விஷயங்களுக்காக துணை ஜனாதிபதி குடும்பம் 10 லட்சம் ரூபாய் நன்கொடை!

குடியரசுத் துணைத்தலைவரின் மனைவி முப்பவரபு உஷம்மா நாயுடு வின் குடும்பத்தினரிடம் இருந்தும் மற்றும் அவர்களது மகன் .ஹர்ஷா, மருமகள் ராதா முப்பவரபு, மகள் தீபா வெங்கட் மருமகன் வெங்கட் இம்மானி மற்றும் அவர்களது நான்கு பேரக்குழந்தைகளிடமிருந்து பங்களிப்புகளை திரட்டுவதில் முன்முயற்சி எடுத்திருந்தார்..

கோவிட்-19க்கு எதிரான போரட்டத்திற்கு ஆதரவாக பிஎம் கியர்ஸ் (PM CARES) நிதிக்காக ரூ..5 லட்சத்திற்கான காசோலையையும் மற்றும் அயோத்தியில் இன்று பூமி பூஜையுடன் தொடங்கிய ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு ஆதரவாக ராமஜென்ம பூமி தீர்த்த்கேஷேத்ரா அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சத்திற்கான மற்றொரு காசோலையையும் வெங்கய்யா நாயுடு அனுப்பினார்.

இரண்டு விஷயங்களுக்காக துணை ஜனாதிபதி குடும்பம் 10 லட்சம் ரூபாய் நன்கொடை!

வெங்கய்யா நாயுடு முன்னதாக மார்ச் மாதத்தில் தனது ஒரு மாத ஊதியத்தை பிஎம் கியர்ஸ் (PM CARES) நிதிக்கு நன்கொடையாக வழங்கி இருந்தார். மேலும், ஒவ்வொரு மாதமும் தமது மாத ஊதியத்தில் 30 சதவிகிதத்தை கோவிட் நோய்தொற்றை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளுக்கு நன்கொடையாக அளிப்பதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார்.